Monday, May 18, 2020

தமிழின் சிறப்பு பற்றிய பாடல்

           தமிழே உன்னை பாடாத  பாடல்
           வீணாகத்  தான்  போகுது ...
           தமிழே உன்னை பாடாத  பாடல்
           வீணாகத்  தான்  போகுது ... 
           தானாகப் பிறக்கும் விலங்குக்கும் கூட
           தமிழ்தான்  முதல்மொழி  என்றாகுது ...
                                                                                               (தமிழே உன்னை)

    1.    பாட்டுக்கொரு பட்டுக்கோட்டை
            கவிதைக்கொரு வைரமுத்து
            திருக்குறளென்றாலே திருவள்ளுவர்தானே
            சிலம்புக்  கிளங்கோவடிகள்
            குயில் பாட்டுக்கு  பாரதியார்
            ராமாயணம்  என்றாலே  கம்பன்தானே
            தமிழ்மொழியைக் ....   காத்திடவே  .......
            நாமெல்லாரும்.......  ஒன்று  சேர்வோம் .......
            ஒரு  மொழி  அழிந்தால் .....
            இனம்  அழியும்  உணர்ந்திடுவோம்...
            எம்மொழியோடு  எனக்கென்ன பேச்சு
            நீதானே  தமிழே  நான்  வாங்கும்  மூச்சு
            வாழ்ந்தாக  வேண்டும் வா  வா  தமிழே !
                                                                                              (தமிழே உன்னை)

    2.     ஆதிக்கவி  வால்மீகி
            அந்தகக்கவி  வீரராகவர்
            கவிராட்சசன்  என்றாலே  ஒட்டகூத்தர்  தான்
            மதுரக்கவி  பாஸ்கரதாஸ்
            கவியரசர்  கண்ணதாசன்
            தமிழ்தாத்தா  உ.வே.சாமிநாத  அய்யர்
            இயல்  தமிழோ......  இயல்  தமிழோ ......
            நாடகத்  தமிழோ  ......   சங்கத்  தமிழோ  ....  
            தமிழ்  மொழியின்  
            சிறப்புகளைப்  போற்றிடுவோம் !
            தமிழின்  இயல்பைத்  தொல்காப்பியம்  சொல்லும் !
            தமிழ்  மொழி  மட்டும்  உலகை  வெல்லும் ..
            தமிழ்  மொழி  வாழ்க !  தமிழர்  வளர்க  !
                                                                                            (தமிழே உன்னை)

எழுதியவர்   :  மா. பெரியசாமி , ஆசிரியர்

No comments:

Post a Comment

  மாணவக் கண்மணிகளே! இதோ இயக்க விதி பாடம். பாருங்களே!