Wednesday, September 9, 2020

ஆசிரியரின் சிறப்பு

 ஆசானே எனது ஆசானே

என் வாழ்வை செதுக்கிய ஆசானே !

அர்ப்பணிப்பே ! எனது  ஆச்சர்யமே !

உலகையே அறிய செய்தவனே !

மெழுகாய் தன்னை வருத்திக் கொண்டு 

உலகிற்கு ஒளியாய் திகழ்பவனே!

நல்ல ஒழுக்கத்தை தந்தவனே !

வரலாற்றை உருவாக்க சொன்னவனே !


கற்றலை புரிந்து கொண்டு 

நிறைவேற்ற உனை அர்பணிப்பாய் !

நற்பண்புகள் உருவாக்கவே 

பொறுப்புடனே நீ செயல்படுவாய் !

வழிகாட்டலே மாற்றத்தின் தேவை   

வழி சொல்லுங்கள் முன்னேற்றவே !

கண்ணியமான தொலைநோக்கு கொண்ட 

உம்மை என்றும் வணங்கிடுவோம் !


குழந்தையான்  சிந்தையிலே

நல்ல தாக்கத்தை விதைத்தவனே !

அன்பால் அகிலத்தையே வெல்லும் 

நம்பிக்கை உடையவனே !

தாய்மொழியையும் சுற்றுச்சூழலையும் 

பாதுகாக்க நினைப்பவனே !

சமூகத்தின்  வித்தகர் - ஆசிரியரே !

அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளே !      

மா.பெரியசாமி ,

பட்டதாரி ஆசிரியர்(அறிவியல்) ,

அரசு உயர்நிலைப் பள்ளி,            

சின்னம்பள்ளி – 636 811,

தருமபுரி மாவட்டம்

Saturday, August 22, 2020

ஆசிரியர் தின வாழ்த்து - கவிதை

                                                                                                                                                                                           ஆசிரியர் தின வாழ்த்து - கவிதை


ஆசானே எனது ஆசானே

என் அறிவை வளர்த்த ஆசானே !

அர்ப்பணிப்பே எனது ஆச்சர்யமே 

உலகை அறிய செய்த வழிகாட்டியே !

ஒன்றும் அறியாத என்னையும் 

ஒரு சிறந்த ஆசானாய் மாற்றினாயே !

நல்ல ஒழுக்கத்தை கற்றுத் தந்தாய் !

வரலாற்றை உருவாக்க சொல்லித் தந்தாய் !


கற்றல் தேவையைப் புரிந்து கொண்டு 

நிறைவேற்ற உனை அர்பணிப்பாய் !

உயர் பண்புகள் உருவாக்கவே 

பொறுப்புடனே நீ செயல்படுவாய் !

மாற்றத்திற்கு தேவை உம் வழிகாட்டலே! 

நாட்டை முன்னேற்ற வழி சொல்லுங்களே

கண்ணியமான தொலைநோக்கு கொண்ட 

உம்மையே வணங்கிடுவோம் !

                        

குழந்தையான் என் சிந்தையிலே

நல்ல தாக்கத்தை விதைத்தவனே !

அன்பால் அகிலத்தையே வெல்லும் 

நம்பிக்கை உடையவனே !

தாய்மொழியையும் சுற்றுச்சூழலையும் 

பாதுகாக்க நினைப்பவனே !

ஆசிரியர் சமூகத்தின்  வித்தகரே !

அனைவருக்கும் ஆசிரியர்தின வாழ்த்துகளே !


மா.பெரியசாமி ,
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்),
அரசு உயர்நிலைப் பள்ளி,
சின்னம்பள்ளி,
தருமபுரி மாவட்டம்.                   

Monday, May 18, 2020

தமிழின் சிறப்பு பற்றிய பாடல்

           தமிழே உன்னை பாடாத  பாடல்
           வீணாகத்  தான்  போகுது ...
           தமிழே உன்னை பாடாத  பாடல்
           வீணாகத்  தான்  போகுது ... 
           தானாகப் பிறக்கும் விலங்குக்கும் கூட
           தமிழ்தான்  முதல்மொழி  என்றாகுது ...
                                                                                               (தமிழே உன்னை)

    1.    பாட்டுக்கொரு பட்டுக்கோட்டை
            கவிதைக்கொரு வைரமுத்து
            திருக்குறளென்றாலே திருவள்ளுவர்தானே
            சிலம்புக்  கிளங்கோவடிகள்
            குயில் பாட்டுக்கு  பாரதியார்
            ராமாயணம்  என்றாலே  கம்பன்தானே
            தமிழ்மொழியைக் ....   காத்திடவே  .......
            நாமெல்லாரும்.......  ஒன்று  சேர்வோம் .......
            ஒரு  மொழி  அழிந்தால் .....
            இனம்  அழியும்  உணர்ந்திடுவோம்...
            எம்மொழியோடு  எனக்கென்ன பேச்சு
            நீதானே  தமிழே  நான்  வாங்கும்  மூச்சு
            வாழ்ந்தாக  வேண்டும் வா  வா  தமிழே !
                                                                                              (தமிழே உன்னை)

    2.     ஆதிக்கவி  வால்மீகி
            அந்தகக்கவி  வீரராகவர்
            கவிராட்சசன்  என்றாலே  ஒட்டகூத்தர்  தான்
            மதுரக்கவி  பாஸ்கரதாஸ்
            கவியரசர்  கண்ணதாசன்
            தமிழ்தாத்தா  உ.வே.சாமிநாத  அய்யர்
            இயல்  தமிழோ......  இயல்  தமிழோ ......
            நாடகத்  தமிழோ  ......   சங்கத்  தமிழோ  ....  
            தமிழ்  மொழியின்  
            சிறப்புகளைப்  போற்றிடுவோம் !
            தமிழின்  இயல்பைத்  தொல்காப்பியம்  சொல்லும் !
            தமிழ்  மொழி  மட்டும்  உலகை  வெல்லும் ..
            தமிழ்  மொழி  வாழ்க !  தமிழர்  வளர்க  !
                                                                                            (தமிழே உன்னை)

எழுதியவர்   :  மா. பெரியசாமி , ஆசிரியர்

கொரோனா வைரஸ் - கோவிட் 19 நோய் பற்றிய விழிப்புணர்வு பாடல்

    கொடிய வைரஸ் கொரோனாவே
    எதற்கு இங்கு நீயும் வந்தாய்
    வூஹான் நகர் கிருமி நீயே
    உலகை உலுக்கும் கொடிய நோயே

    சொல்லி அழ யாரும் இல்லை
    தள்ளி நிற்க வீடும் இல்லை
    ஏழைக்கு வந்த சோதனை
    மக்கள் நெஞ்சிலே வேதனை

1. சளி காய்ச்சல் வறட்டு இருமல்
    மூச்சுத் திணறல் தலைவலி தும்மல்
    வயிற்றுப் போக்கு தொண்டை வறட்சி
    இவை அனைத்தும் அறிகுறிகள் தான்
    இரும்மும் போதும் தும்மும் போதும்
    பரவும் கொடிய கோவிட் நோயே
    14 நாட்களில் தெரியும் ... 
    இந்த நோயின் அறிகுறிதான் ....
    ஆனால் அதில்லாமலும் ...
    இது பரவக் கூடுமே ...
    இது கோவிட் 19.....
    இதன் பாதிப்பு பலமானது ......
                                                                  (கொடிய வைரஸ்) 

2. சிறு வயது குழந்தைகளையும்
    மூத்தக் குடி மக்களையும்
    தொற்றா நோயை பெற்றவரையும்
    எதிர்ப்புத் திறன் குறைந்தவரையும்
    எளிதில் தொற்றிக் கொள்ளுமென்று
    வல்லுநர்கள் சொன்னதினாலே
    தனிமைப்படுத்தி இருத்தல் மட்டுமே .....
    இதற்கு சிறந்த தீர்வடா ...
    அறிகுறிகள் உனக்குத் தெரிந்தால் .....
    நீயும் சிகிச்சைக்கு செல்லடா .....
    தனித்திரு .... விழித்திரு .... 
    நீ வீட்டிலேயே ... இரு...
                                                                     (கொடிய வைரஸ்) 
    
எழுதியவர்  : மா.பெரியசாமி, ஆசிரியர்

Thursday, May 14, 2020

மாவட்ட அளவில் முதலிடம்...

IMPART ஆய்வறிக்கை தயாரித்தலில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் எனது பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.
தமிழ் : மா.பெரியசாமி
ஆங்கிலம் : இர. முருகன் ஆகியோர்
வழிகாட்டி ஆசிரியர்கள்.
நாளை திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் எங்கள் இளஞ் சிங்கங்கள்.

மாநில அளவில் முதலிடம்...

தமிழ்     :     மா.பெரியசாமி
        வழிகாட்டி ஆசிரியர்
மாணவி பெயர்  :     M.நவ்யாஸ்ரீ
பள்ளி     :     அரசு உயர்நிலைப் பள்ளி,
        சின்னம்பள்ளி
இன்று ( 06.02.2020 )திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான IMPART ஆய்வறிக்கை சமர்பித்தல் போட்டியில் மாநில அளவில் முதலிடம்...
வாய்ப்பு வழங்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்திற்கும் , வழிகாட்டிய அருமை நண்பர் எனது குரு சங்கர் அவர்களுக்கும் எனது பள்ளி தலைமை ஆசிரியர் வீ.மாது அவர்களுக்கும் என்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றி....
பெருமை.......

  மாணவக் கண்மணிகளே! இதோ இயக்க விதி பாடம். பாருங்களே!