Monday, May 18, 2020

கொரோனா வைரஸ் - கோவிட் 19 நோய் பற்றிய விழிப்புணர்வு பாடல்

    கொடிய வைரஸ் கொரோனாவே
    எதற்கு இங்கு நீயும் வந்தாய்
    வூஹான் நகர் கிருமி நீயே
    உலகை உலுக்கும் கொடிய நோயே

    சொல்லி அழ யாரும் இல்லை
    தள்ளி நிற்க வீடும் இல்லை
    ஏழைக்கு வந்த சோதனை
    மக்கள் நெஞ்சிலே வேதனை

1. சளி காய்ச்சல் வறட்டு இருமல்
    மூச்சுத் திணறல் தலைவலி தும்மல்
    வயிற்றுப் போக்கு தொண்டை வறட்சி
    இவை அனைத்தும் அறிகுறிகள் தான்
    இரும்மும் போதும் தும்மும் போதும்
    பரவும் கொடிய கோவிட் நோயே
    14 நாட்களில் தெரியும் ... 
    இந்த நோயின் அறிகுறிதான் ....
    ஆனால் அதில்லாமலும் ...
    இது பரவக் கூடுமே ...
    இது கோவிட் 19.....
    இதன் பாதிப்பு பலமானது ......
                                                                  (கொடிய வைரஸ்) 

2. சிறு வயது குழந்தைகளையும்
    மூத்தக் குடி மக்களையும்
    தொற்றா நோயை பெற்றவரையும்
    எதிர்ப்புத் திறன் குறைந்தவரையும்
    எளிதில் தொற்றிக் கொள்ளுமென்று
    வல்லுநர்கள் சொன்னதினாலே
    தனிமைப்படுத்தி இருத்தல் மட்டுமே .....
    இதற்கு சிறந்த தீர்வடா ...
    அறிகுறிகள் உனக்குத் தெரிந்தால் .....
    நீயும் சிகிச்சைக்கு செல்லடா .....
    தனித்திரு .... விழித்திரு .... 
    நீ வீட்டிலேயே ... இரு...
                                                                     (கொடிய வைரஸ்) 
    
எழுதியவர்  : மா.பெரியசாமி, ஆசிரியர்

No comments:

Post a Comment

  மாணவக் கண்மணிகளே! இதோ இயக்க விதி பாடம். பாருங்களே!